பெங்களூரு சென்ற விமானத்தில் நடுநாவினில் தொழில்நுட்பக் கோளாறு

249
Advertisement

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19.05.2002 அன்று காலை பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக புறப்பிட்ட 27 நிமிடங்களில் மீடனும் மும்பை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா ஏ320 நியோ விமானத்தின் விமானிகள் காலை 9.43 மணிக்கு சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, எஞ்சின் ஒன்றில் அதிக வாயு வெப்பநிலை இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அதையடுத்து, விமானத்தை மீண்டும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையில் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக,எந்த அசம்பாவிதமும் ஏற்படும் முன் விமானம் பத்திரமாக தரையிறங்கியது,பின்பு பயணிகள் மாற்று விமானத்தில்  பெங்களூரு அனுப்பிவைக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா கூறுகையில்,ஏர் இந்தியா பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது, மேலும் எங்கள் குழுவினர் இந்த சூழ்நிலைகளை கையாள்வதில் திறமையானவர்கள். எங்கள் பொறியியல் மற்றும் பராமரிப்பு குழுக்கள் உடனடியாக ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராந்துவருவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.