சட்டைகளை திருடிய 3 பேர் கைது

180

பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கு ஏற்றுமதிக்காக 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 11 ஆயிரம் சட்டைகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து ஏற்றுமதி நிறுவனத்திற்கு சென்றடைந்த சட்டைகளின் அட்டை பெட்டி சீல் உடைக்கப்பட்டிருந்ததால், அதனை ஏற்றுமதி நிறுவனத்தினர் வாங்க மறுத்தனர்.

பின்னர் சட்டைகளை திருடியது தெரிய வந்ததால் லாரியை பாதி வழியில் நிறுத்திவிட்டு செல்வக்குமார் தப்பி ஓடினார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உரிமையாளர் முனிராஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 1 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புடைய 363 சட்டைகள் திருடிய ஜான், பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.