பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்கிறார்.

249
Advertisement

பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மொத்தம் உள்ள 117 இடங்களில் அக்கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆம் ஆத்மி சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பகவந்த் சிங் மான், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

பதவி ஏற்பு விழாவில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.