மணமகன் விக் கழன்றதால்-திருமணத்தை நிறுத்திய மணமகள்

222
Advertisement

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த நடத்தலாம்” என தாத்தா பாட்டி காலத்திலிருந்து சொல்லி கேட்டிருப்போம்.இங்கு ஒரே ஒரு பொய் சொல்லி,திருமணத்தில் அதேவே முட்டுக்கட்டையான சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் உன்னோ பகுதியில் திருமணம் ஒன்று நிச்சியிக்கப்பட்டு வெகு சிறப்பாக திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அதைத்தொடர்ந்து திருமணத்தன்று,பாதி சடங்குகள் முடிந்துவிட்டன,மேலும் முக்கிய சடங்கு அதிகாலையில் திட்டமிடப்பட்டது.

ஆனால் ,அப்போது  யாருக்கும் தெரியாது அதிகாலை இந்த சூழல் தலைகீழாக மாறும் என்று.திட்டமிட்டபடி அடுத்த நாள் அதிகாலை மணமகனும் சடங்கை நிறைவேற்ற மண்டபத்தை நோக்கி வந்துள்ளார்.மண்டபத்திற்குள் நுழையும் முன் திடீரென தரையில் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

கீழே விழுந்ததில் மணமகன் தலையில் இருந்த விக் கழன்று விழுந்துள்ளது.இதனை அங்கிருந்த அனைவரும் பார்த்துவிட, மாப்பிள்ளை வழுக்கை என்பது மணமகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

மணமகனுக்கு வழுக்கை என்று தெரிந்தவுடன்  அதிர்ச்சியடைந்த மணமகள் திருமண சடங்குகளுக்கு செல்ல மறுத்துவிட்டார்.இந்த உண்மையை மணமகன் குடும்பத்தினர் மறைத்துவிட்டதாகவும்,இனி என்னால் அவரை திருமணம் செய்திகொள்ள முடியாது என தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, பின்னர்,இரு குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு , திருமணத்திற்காக பெண் வீட்டார் செலவு செய்த 5.66 லட்சம் ரூபாய்யை மணமகன் தரப்பு திருப்பி வழங்கியது.

மணமகன் வழுக்கை  என்பதை மணமகன் குடும்பத்தினர் மறைத்திருக்கக் கூடாது. இதை முன்பே கூறிருந்தால் நாங்கள் மணமகளை மனதளவில் தயார் செய்திருப்போம்,அவள் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டாள் என மணமகள் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.