“மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் திருப்பி அளிக்கப்பட மாட்டாது”

97

மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி அளிக்கப்பட மாட்டாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்பினய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி வழங்கினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்த செல்போன்கள் திரும்ப தரப்படாது எனவும் கூறினார்.

தனியார் பள்ளிகள், மாணவர்களை சீருடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆயிரத்து 494 ஆசிரியர்களை  பணியில் அமர்த்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகளில் முதல் 5 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும்,அதன் பின்னர்தான் வகுப்புகள் தொடங்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.