மோசமான வேலை பார்த்த ஷாலினி.. நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்.

227
Advertisement

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்கள் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் அஜித்- ஷாலினி இருவரும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் தங்களுடைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னிலையில் சீனியர் ஆர்டிஸ்ட் இடம் ஷாலினி மோசமாக நடந்து கொண்டதை தெரிந்ததும் நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்தை பற்றி, அந்த ஆர்ட்டிஸ்ட்டே சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர் நடிகர் பப்லு.

இவர் இப்போது சின்னத்திரையில் மூத்த நடிகராக டாப் சீரியல்களில் அப்பா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் நடிகர் அஜித்துடன் நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் அஜித்தின் மனைவி ஷாலினியும், பப்லுவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும், ஆனால் அவர்கள் இதுவரை எந்த படத்திலும் இணைந்து பணியாற்றாததால் அவருடன் பேச தயங்கியதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து பப்லுவின் போன் நம்பர் வாங்கி அவரிடம் பேசிய ஷாலினி மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.