புகைபிடித்தல்,போதைப்பொருட்கள் பயன்படுத்த தடை !

304
Advertisement

பணியிடத்தில் புகைபிடித்தல் மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தடை செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம், மேலும் இந்த உத்தரவை மீறும் ஊழியர்கள் “தகுந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுரேஷ் தத் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடிப்பதற்கும், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது எனவே, ஊழியர்கள் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

A

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அத்துமீறல்களுக்கு எங்களிடம் சகிப்புத்தன்மை இல்லை,உத்தரவுகளை மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து ஊழியர்களும் டாடா நடத்தை விதிகளின் அடிப்படைக் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளனர். சக பணியாளர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.