80% மக்களின் வேலைக்கு ஆப்பு வைக்க போகும் AI தொழில்நுட்பம்! அதிர்ச்சி ரிப்போர்ட்…

138
Advertisement

4G, 5G தொழில்நுட்பங்களை புரிந்து கொள்ளத் தொடங்குவதற்கு முன் ChatGpt, Humanoid Robots, நிஜத்துக்கே சவால் விடும் AI புகைப்படங்கள் என Artificial Intelligenceஇன் அசாத்திய வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

Singularity Net நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் AI ஆராய்ச்சியாளருமான பிரேசில் நாட்டை சேர்ந்த பென் கார்ட்ஸல் (Ben Gortzel),  அண்மையில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாட்டில் AI தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

மனிதர்களுக்கு இணையான திறனோடு செயல்படும் அளவிற்கு AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய இன்னும் சில வருட இடைவெளியே உள்ளது என பென் கூறியுள்ளார்.

தவறான தகவல்கள் பரவ ChatGpt போன்ற தொழில்நுட்பம் காரணமாக அமையும் என்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என சிலர் கூறி வரும் நிலையில், இணையமும் அவ்வாறே செயல்படுவதாக கூறிய பென், அதற்காக இணைய சேவையை எப்படி தடை செய்ய முடியாதோ அதே போல AI தொழில்நுட்பத்தையும் தடை செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும், வரும் வருடங்களில் கிட்டத்தட்ட 80% மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறிய பென், வாழ்வதற்காக வேலை செய்வதை விட்டுவிட்டு மக்கள் மற்ற விருப்பங்களை பின்தொடர இது வழிவகை செய்யும் என கூறும் பென், மக்களின் வேலைகள் AI க்கு மாறும் காலமே சவாலானதாக அமையும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.