அவசரமாக வேலையை ராஜினாமா செய்யும் ஆப்கானிஸ்தான் ஆண்கள்!

200
Advertisement

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் பல்கலைக்கழகத்தில் படிக்க பெண்களுக்கு தடை விதித்துள்ளது தாலிபான் அரசு.

உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தால் காபூல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் தங்களிடம் பயிலும் பெண்களுக்கு கல்வி பயில அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிமைகளுக்காக போராடும் மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் வகுப்புகளையும் தேர்வுகளையும் புறக்கணித்து தாலிபானுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆண் பேராசிரியர்களும் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 17 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக தடை பெண்களின்  ஆற்றலை  முடக்கி போடும் பிற்போக்குவாதமாக பார்க்கப்படுகிறது. பெண்களின் உரிமைகளுக்காக ஆண்களும் இணைந்து போராடுவது நம்பிக்கையூட்டும் செயலாக அமைவதாக சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.