நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்

35

திருக்குவளை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனத்தை சேர்ந்த சேகர், இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மின்னல் வேகத்தில் சென்ற இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

Advertisement

இந்த விபத்தில் ஜெயக்குமாரும், சேகரும் படுகாயமடைந்தனர்.