விண்வெளிக்கு செல்ல வேண்டும் அந்தரத்தில் இருக்கும் பூமியின் அழகைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும், ஆனால் விண்வெளிக்கு செல்வது எளிதான காரியம் அல்ல, விண்வெளி வீரர்களால் மட்டுமே விண்வெளிக்குச் செல்வது சாத்தியமாக உள்ளது.
எனவே விண்வெளி ஆசை சாதாரண மக்களுக்குச் சாத்தியமல்லாத விஷயம் இருக்கிறது. ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Zephalto என்ற தொடக்க நிறுவனம், ராட்சத பலூன் மூலம் மக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும், புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இந்த நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் (CNES) என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு, இந்த புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. அதாவது முதல் கட்டமாக ஒன்றரை மணி நேரப் பயணமாகப் பூமியின் பரப்பளவில் இருந்து சுமார் 15.5 மையில் உயரத்திற்குச் சென்று அங்கிருந்து வேடிக்கை பார்க்கு வகையில் திட்டம் போடப்பட்டுள்ளது, பீன்னர் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பல விதமான உணவுகள் வழங்கப்பட்டு, பூமியின் அழகை ஆகாயத்திலிருந்து ரசித்துக் கொண்டே சாப்பிடுவதற்காக வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.
பின்னர் பூமி திரும்பும் திட்டமும் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து விதமான உலக மக்களையும் கவர வேண்டும் என்ற
நோக்கத்தில் இருக்கிறது. ஹைட்ரஜன் வாய்வு வழியாக ராட்சத பலூன் இயங்கயுள்ளது, இதற்கான சோதனைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. ஒரு முறை ஆறு பயணிகள் இதில் பயணம் செய்யலாம் . ஒரு நபருக்கு 8 முதல் 9 லட்சம் டிக்கெட் கட்டணம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.