விண்வெளியில் ஏற்பட்ட பெரிய அண்ட வெடிப்பு 100 சூரியன்களை மிஞ்சும் வெளிச்சத்தைப் பார்த்த விஞ்ஞானிகள்….

211
Advertisement

விண்வெளியில் ஏகப்பட்ட ஆபத்துக்கள் இருக்கிறது.

ஏனென்றால் அங்குப் பல விதமான துணை கிரகங்களின் மோதல் வால் நட்சத்திரங்களின் வெடிப்பு போன்ற ஆபத்தான சம்பவங்கள் ஏற்படும். ஆனால் இவை அனைத்தையும் விட விண்வெளியில் பேரழிவை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நிகழ்வை, பூமியிலிருந்து கொண்டே ஒரு விஞ்ஞான குழு பார்த்துள்ளது.


விண்வெளியில் பிளாக் ஹோல் என்ற மிகப் பெரிய கருந்துளை உள்ளது, இதன் முழு அளவு பல லட்சக்கணக்கான சதுரடி தூரத்திற்கு இருக்கும், இதன் மையப் பகுதியின் ஈர்ப்பு மிக மிக சக்திவாய்ந்ததாக அமையும், எனவே இதன் பாதையில் வரும் அனைத்து விதமான விண்வெளி பாறைகள் மற்றும் வால் நட்சத்திரங்களை அதன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் சத்தி கொண்டது, எனவே சூரியனை விட அளவில் மிகப் பெரிய நட்சத்திரத்தை தன் வசம் ஈர்த்து கொண்டது அந்த பிளாக் ஹோல், அந்த நட்சத்திரத்தை தன் பக்கம் இழுத்து இந்த பெரிழிவை செய்து முடிக்க பிளாக் ஹோலுக்கு மூன்று ஆண்டு காலம் தேவைபட்டதாம்,

இந்த அழிவு குறித்த முழு விவரத்தை இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான குழு வெளியிட்டுள்ளது, சுமார் 8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு அழிவு ஏற்பட்டதாகவும், அதனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த அழிவு மிகப் பெரிய ஒளியை அதாவது வெளிச்சத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது, அந்த வெளிச்சம் 100 சூரியன்களை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது, விண்வெளியில் வெடிக்கும் நட்சத்திரங்களின் பாகங்கள் அதிக வெளிச்சத்தை ஏற்படுத்தும், அதற்கு பெயர் சூப்பர் நோவா என்று சொல்லப்படுகிறது, எனவே சூப்பர் நோவை தேடிக் கொண்டு இருந்த சமயத்தில், இந்த பேரழிவு சம்பவம் விஞ்ஞான குழுவின் தேடல் கருவில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது .