பூமியில் விழுந்த 15 டன் விண்கல்! கூடவே கிடைத்த அதிசயப் பொருள்

55
Advertisement

2020ஆம் ஆண்டு சொமாலியா நாட்டில் 15 டன் எடை மதிக்கக்கூடிய எல் அலி என்ற விண்கல் விழுந்து உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டு மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த விண்கல், இதுவரை பூமியில் விழுந்ததில் ஒன்பதாவது பெரிய விண்கல் ஆகும். விண்கல்லில் இருந்து எடுக்கப்பட்ட 70 கிராம் அளவான பகுதி ஆல்பட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியாகி அறிவியல் உலகில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்த விண்கல்லில் இருந்து இதுவரை கேள்விப்பட்டிராத இரண்டு புதிய கனிமங்கள் உலகிற்கு கிடைத்துள்ளன.

Advertisement

இந்த கனிமங்கள் எல் அலைட் மற்றும் எல்கின்ஸ்டான்டோனைட் என பெயரிடப்பட்டுள்ளது. எல் அலைட் என்ற கனிமம் எல் அலி விண்கல்லின் நினைவாகவும், எல்கின்ஸ்டான்டோனைட் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் விண்கோள் ஆராய்ச்சிப் பிரிவின் முதன்மை இயக்குனர் லின்டி எல்கின்ஸ்டான்டோனை கௌரவிக்கும் வகையில் பெயரிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.