இதுவரை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் -அஜித்’ படங்கள்! தல தளபதி CLASH வரலாறு

156
Advertisement

எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி கமல் வரிசையில் விஜய் அஜித் என தமிழ் சினிமா ரசிகர்கள் 90களின் தொடக்கத்திலேயே முடிவு செய்து விட்டனர்.

கோலிவுட்டின் எதிரெதிர் துருவங்களாக வளர்ந்து நிற்கும் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களான விஜயும் அஜித்தும் நேரெதிரே திரையரங்கு ரிலீஸில் மோதிக்கொண்டது எத்தனை முறை? அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம், முதன்முறையாக விஜயின் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் அஜித்தின் ‘வான்மதி’ படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகின.

அதே ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயின் ‘பூவே உனக்காக’ மற்றும் அஜித்தின் ‘கல்லூரி வாசல்’ படங்கள் வெளியானது. இதில் ‘பூவே உனக்காக’ படம் blockbuster ஹிட் அடித்து விஜயின் வெற்றிப்பயணத்தை தொடங்கி வைத்தது.

1997ஆம் ஆண்டு விஜயின் ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ படங்கள் ரிலீஸ் ஆனது. மலையாள பட ரீமேக்கான ‘காதலுக்கு மரியாதை’, விஜய்க்கு மைல்கல் வெற்றிப்படமாக அமைந்தது.

1998ஆம் ஆண்டு அஜித்தின் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ மற்றும் விஜயின் ‘நிலாவே வா’ படங்கள் வெளியாகின. அஜித் guest ரோலில் நடித்திருந்த ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

1999ஆம் ஆண்டு அஜித்தின் ‘உன்னை தேடி’ மற்றும் விஜயின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படங்கள் வெளியாகின. இதில், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ சிறப்பான வரவேற்பை பெற்றது.

2000ஆம் ஆண்டு விஜயின் ‘குஷி’ மற்றும் அஜித்தின் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘குஷி’ படத்தை இளைஞர்கள் கொண்டாடிய நிலையில், ராணுவம் சார்ந்த கதையான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ அஜித்திற்கு மக்களிடையே நல்ல மதிப்பை ஏற்படுத்தியது.

2001ஆம் ஆண்டு விஜயின் ‘Friends’ மற்றும் அஜித்தின் ‘தீனா’ வெளியாகி, இரண்டுமே குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களாக அமைந்தன.

2002ஆம் ஆண்டு விஜயின் ‘பகவதி’ மற்றும் அஜித்தின் ‘வில்லன்’ படங்கள் வெளியாகின. ‘பகவதி’ படத்தில் முழுமையான action ஹீரோவாக மாறி விஜயும்,  இரட்டை வேடத்தில் நடித்து அஜித்தும் ட்ரெண்டை மாற்றி வெற்றியை ருசி பார்த்தனர்.

2003ஆம் ஆண்டு விஜயின் ‘திருமலை’ மற்றும் அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ வெளியானது. இதில் விஜய்க்கு action formula மீண்டும் கைகொடுத்து திருமலை ஹிட் அடிக்க, ஆஞ்சநேயா flop ஆனது.

2006ஆம் ஆண்டு விஜயின் ‘ஆதி’ மற்றும் அஜித்தின் ‘பரமசிவன்’ வெளியானது. ‘பரமசிவன்’ சுமாரான வசூலை ஈட்ட, ‘ஆதி’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

2007ஆம் ஆண்டு விஜயின் ‘போக்கிரி’ மற்றும் அஜித்தின் ‘ஆழ்வார்’ வெளியாகின. ரீமேக் படமான ‘போக்கிரி’ விஜய்க்கு பெரும் வெற்றியை தேடித் தந்தது.

2014ஆம் ஆண்டு வெளியான விஜயின் ‘ஜில்லா’ மற்றும் அஜித்தின் ‘வீரம்’ ஆகிய இரு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தன.

2023ஆம் ஆண்டு இருதரப்பு ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கும் விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் box officeஇல் நிகழ்த்த போகும் சாதனைகள் என்ன, சந்திக்கப் போகும் சோதனைகள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.