“பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை”

87

பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்று தாங்கள் கூறவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சார்பாக திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

அப்போது பேசிய அவர், பேரறிவாளனை குற்றவாளி அல்ல என்று தாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்றும், மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பேரறிவாளன் விடுதலையை விமர்சித்தும், திமுக – காங்கிரஸ் கூட்டணியின் உறவை பிரிக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.