திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் கேக் ஹெவன் என்ற பெயரில் கேக் கடை திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு  பல்வேறு  சலுகைகளை இந்த கடை சார்பில்

24
Advertisement

அறிவித்திருந்தனர். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கிலோ ஐஸ்கேக் மற்றும் அரை கிலோ ஐஸ்கேக் என அறிவித்திருந்தனர். இந்நிலையில்,திருவண்ணாமலை நகரில் உள்ள பலரும் கேக் கடைக்கு முன் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஒரு ரூபாய் நாணயத்தை கடை உரிமையாளர்களிடம் கொடுத்த பின்பு அவர்களுக்கு ஒரு கிலோ ஐஸ்கேக் மற்றும் அரை கிலோ ஐஸ்கேக் வழங்கினர். திறப்பு விழாவிற்காக சலுகைகள் அறிவித்திருந்த கேக் கடை முன் ஏராளமானோர் ஆர்வமுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வழங்கி ஒரு கிலோ மற்றும் அரை கிலோ ஐஸ் கேக்குகளை உற்சாகமாக வாங்கிச் சென்றனர்.