நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொனவக்கரை கிராமத்தில் கரடி மற்றும் முள்ளம்பன்றி உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது…

97
Advertisement

கோத்தகிரி அருகே உள்ள கொனவக்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இந்த குடியிருப்பு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி தேனை தேடி   நீண்ட நேரம் சாலையோரத்தில் உலா வந்து வனப்பகுதிக்கு சென்றது. இதனிடையே, அதே கிராமத்தில் முள்ளம்பன்றி ஒன்று உலா வந்தது. இதை பார்த்த ரோந்து காவலர்கள் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளாம் பன்றியை வனப்பகுதிக்குள் விரட்டினர். எனவே, இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகளவு நடமாடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.