3வது மகள், 2வது மனைவியுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய இமான்! Dressஐ கலாய்த்த நெட்டிசன்ஸ்…

176
Advertisement

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இமான், கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தது விஜய் நடித்த ‘தமிழன்’ படம் ஆகும்.

‘கும்கி’, ‘ரம்மி’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்களில் தனக்கே உரிய trademark இசையால் ரசிகர் கூட்டத்தை மயக்கி வைத்துள்ளார்.

2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சார்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இமானுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் முதல் மனைவியை விவாகரத்து செய்த இமான், அமலி என்பவரை மணம் முடித்தார்.

அமலிக்கு நேத்ரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இந்த வருடம் அவர்களுடன் தனது முதல் திருமண நாளை கொண்டாடி உள்ளார். இதற்காக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போட்டோவில், இமான் அணிந்திருக்கும் உடையை சில நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.