ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே வேகம் எடுக்க தொடங்கியுள்ள வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
வெயிலால் நீரிழப்பு, வேர்க்குரு, சருமம் கறுப்படைதல் போன்ற பல உடல் உபாதைகள் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தீவிர பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய Heat Stroke பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களை எளிதில் தாக்கும் இந்த நோய் இளம் விளையாட்டு வீரர்களை கூட விட்டு வைப்பதில்லை. 104 Farenheat அளவு வெப்ப நிலையை உடல் அடைந்ததும் மத்திய நரம்பு மண்டலத்தில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. குழப்பமான மனநிலை, கவனக்குறைவு, வாந்தி ஆகிய அறிகுறிகளில் தொடங்கி வலிப்பு மற்றும் கோமா போன்ற தீவிர பாதிப்புகளும் ஏற்படக் கூடும். மயக்கம், தலைவலி, படபடப்பு, வாய் கொளறுதல் ஆகியவை Heat Strokeஇன் அறிகுறிகளாகும்.
Heat Stroke ஏற்பட்டுள்ளதாக கருதினால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைப்பது அவசியம் ஆகும். ஸ்பாஞ்சில் தண்ணீர் நனைத்து அக்குள், பின்கழுத்து ஆகிய அதிக இரத்தக்குழாய்கள் இருக்கும் பகுதிகளில் வெப்பத்தை தணிக்க உதவுவது முதலுதவியாக அமையும். மருத்துவ சிகிச்சை பெற தாமதம் ஏற்பட்டால் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் விரைவாக மருத்துவமனை செல்ல வேண்டும்.
உச்சகட்ட வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, தளர்வான காற்றோட்டமான ஆடைகளை அணிவது, குடை, தொப்பி போன்றவை கொண்டு தலையை நேரடி வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது, sunscreen அப்ளை செய்வது, எலெக்ட்ரோலைட் balance தரக்கூடிய சிட்ரஸ் பழச்சாறுகள் மற்றும் பருவ கால பழங்களை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தால் கூடுதல் திரவச்சத்து பெறுவதை உறுதி செய்தல் ஆகிய வழிமுறைகளை கடைபிடிப்பது heat stroke மட்டும் இல்லாமல் வெயில் கால நோய்களின் தீவிரத்தை குறைக்க உதவும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.