மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், அம்மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் ஊழலை ஆதரிக்கவில்லை என்று மேற்கு வங்க முதலமச்சர் தெரிவித்துள்ளார்.
யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், கட்சியும் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். ஆனால், தனக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதற்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு, புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசை உடைக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.