காட்டுவிலங்குகளில் மிகவும் ஆபத்தான ஒன்று சிறுத்தைகள்.விலங்குகள் வாழும் சில காட்டு பகுதிகளும் பூங்காவாக அறிவிக்கப்பட்டு விலங்குகள் பராமரிக்கப்படுவதும் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் , ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று நாயை கொன்ற அதிர்ச்சி வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி அங்கூர் ராப்ரியா தந்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், டைகர் சபாரி செய்ய பார்வையாளர்கள் உள்ளே சென்றனர்.
அப்போது, ஒரு பகுதில் சிறுத்தை ஒன்று ஜீப் செல்லும் பாதையின் ஓரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கிறது.பார்வையாளர்கள் சிறுத்தையை படம்பிடித்துக் கொண்டுருந்தபோது எங்கிருந்தோ வந்த நாய் சிறுத்தையின் அருகே கடந்து செல்கிறது.
ஏதோ ஒன்று அருகில் செல்வதை உணர்த்த சிறுத்தை சட்டென எழுந்த்திருக்க, குரைத்தால் தன்னை தாக்காது என நினைத்து சிறுத்தையை பார்த்து அந்த நாய் குரைக்க, அதில் ஆத்திரமடைந்த அந்த சிறுத்தை நாயின் தலையை கவ்வியது.
ஐந்தே வினாடிகளில் சிறுத்தையின் கடியில் தன் உயிரை விட்ட அந்த நாயின் கடைசி நொடிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.