Saturday, December 14, 2024

வானத்தில் தெரிந்த “UFO”…வீட்டிற்கு பின்புறம் நின்ற 10அடி நபர்!!!!ஏலியன் பூமிக்கு வந்துவிட்டதா?

அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகஸில் ஏலியன் வந்ததாகவும் அதனை பார்த்ததாகவும் ஒருவர் கூறியிருக்கும் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது அதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் (Nevada) உள்ள நபர் ஒருவர் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று விழுவதை பார்த்ததாகவும், தனது வீட்டின் பின்புறத்தில், 2 உருவங்களின் அசைவை பார்த்ததாகவும் கூறியிருப்பது அனைவரிடையேயும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் பார்த்த உருவங்கள் 100% மனிதர்கள் அல்ல என்றும் அந்த உருவங்கள் 8 அடி உயரம் மற்றும் 10 அடி உயரம் இருந்ததாகவும், பெரிய பளபளப்பான கண்கள், ஒரு பெரிய வாயுடன் இருந்ததாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் அந்த உருவங்கள் வேற்றுகிரகவாசிகள் போலவே இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.இதுகுறித்து போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டதாம் அதனை தொடர்ந்து  புகார் அளித்த நபரின், நான்கு குடும்ப உறுப்பினர்களில் இருவர் இதேபோன்ற காட்சிகளைப் பார்த்ததாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் கூட ஏலியன் குட்டி ஒன்று பூமியில் இறந்து கிடந்ததாக காணொளிகள் வெளியாகின இவை அனைத்தும் மனிதர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news
Related news