அதிசயக்கும் வகையில் நடந்த நிதியமைச்சரின் மகள் திருமணம்..!

207
Advertisement

ஊர் முழுக்க வாழை மரங்கள்… பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள்… போக்குவரத்துக்கு இடையூராக தோரண வாயில்கள்…

வகை வகையான வாத்திய இசை… கண்கவரும் வான வேடிக்கை… விஐபி-களை வரவேற்க யானை… மாப்பிள்ளை அழைப்புக்கு குதிரை… என காசை காசாக மதிக்காமல் தண்ணியாக செலவு செய்து பந்தாகாட்டும் நபர் யாராக இருப்பாரென்று பார்த்தால், சராசரி வார்டு கவுன்சிலராகவோ அல்லது ஏதேனும் கட்சியில் சிறு சிறு பொறுப்பில் இருப்பவருமாவோ இருப்பார்.

அதுவும் இந்நாளாக இல்லாமல் முன்னாள் உறுப்பினர்கள் / அமைச்சர்கள்கூட இப்படியான ஆடம்பர திருமணங்களை செய்வதுண்டு.இப்படி சின்ன சின்ன அரசியல் பதவியில் இருப்போர் / இருந்தோரின் வீட்டு திருமணமே ஆடம்பரத்தின் உச்சத்தில் நடக்கும் இந்த காலத்தில், மத்திய அமைச்சர்… அதுவும் ‘நிதியமைச்சர்’ நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் எளிமையிலும் எளிமையாக நடந்துள்ளது.

மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம்.

வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார் என்பது பலரின் கவனத்தையும், பாராட்டையும்  பெற்று வருகிறது.

https://www.facebook.com/watch/?v=247027271295045