இங்க தடூப்பூசி போடலனா EXTRA வரி….

406
Advertisement

உலகம் முழுக்க மீண்டும் வேகமாக பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஒருபுறம் அரசு தடுப்பூசியின் அவசியங்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருக்கையில், மறுபுறம் உலகம் முழுக்க தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்கள் பெருகி வருகின்றது.

இந்நிலையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கூடுதல் மருத்துவ வரி விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவிலே அதிக அளவில் கொரோனா மரணங்களை சந்தித்த மாகாணம் இந்த கியூபெக் மாகாணம் தான்.

தற்போது கியூபெக் மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் ஒமிக்றான் தொற்றால் அச்சம் கொண்டுள்ள அந்த மாகாண அரசு தடுப்பூசி செலுத்தாதவர்களின் மீது கூடுதல் மருத்துவ வரிகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கியூபெக் மாகாணத்தலைவர்,’ இன்னும் ஓரிரு வாரத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் கூடுதல் வரி செலுத்த தயாராகுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் இதுவரை 12 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. ஆனால், கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இவர்களில் பாதி அளவு உள்ளது.