2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கப்பட்டுவிடும்
என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின்
வெள்ளி விழாவில் உரையாற்றும்போது இந்தத் தகவலை
அவர் தெரிவித்தார்.
அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையின்போது,
தொலைத்தொடர்புத்துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
5ஜி நெட்ஒர்க் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும். இதன்மூலம்
இந்தியப் பொருளாதாரம் 450 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும்
என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி சேவை வணிகம், விவசாயம், சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு
உள்ளிட்ட துறைகளில் மகத்தான மாற்றத்தைக் கொண்டுவரும். 21ஆம்
நூற்றாண்டின் தாரக மந்திரம் ‘தொடர்பே வளர்ச்சிக்கு அடிப்படை’ என்பது
தான்.
இப்போது 4ஜி காலகட்டத்திலிருந்து 5ஜி காலகட்டத்தை நோக்கி முன்னேறிக்
கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மொபைல் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, உலகிலேயே அதிகளவில் மொபைல்களை உற்பத்தி செய்யும்
நாடு என்னும் சிறப்பை இந்தியா பெற்றுள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் நமது தற்சார்பு உலக அரங்கில்
நம் தேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
2030ல் 6ஜி பயன்பாடு அமலுக்கு வரும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது என்று
தெரிவித்துள்ளார்.