46 மருந்துகள் அதிரடி தடை? திடீர் ட்விஸ்ட்…

227
Advertisement

நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏராளமான மருந்து, மாத்திரைகளின் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. அவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதிரடி தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படியொரு அறிவிப்பு என்பது சமீபத்தில் வெளியானது அல்ல. இது, பழைய அறிவிப்பு. அதுவும் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படும்போது முறையான நடவடிக்கையும் எடுக்கப்ப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த, கூடுதல் விவரங்களைத்தான் இந்த வீடியோவுல டீடெய்லா பார்க்கப்போறோம்…

கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மருந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 932 மருந்தின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 886 மருந்துகள் உபயோகப்படுத்துவதற்கு ஏற்றவையாகவும், 46 மருந்துகள் தரமற்ற மருந்துகளாகவும் அறிவிக்கப்பட்டன.

தரமற்றவையாக கூறப்படும் இந்த 46 மருந்துகள்  மூச்சுத்திணறல், மூக்கு அடைப்பு, ஜலதோஷம் உள்ளிட்ட  பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம்,  கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் என்று தெரிய வந்தது.

மேலும் இந்த 46 மருந்துகளின் விவரங்கள் குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன் உண்மை தன்மை  குறித்து சத்தியம் டிஜிட்டல் குழு விசாரித்தபோதுதான், அப்படியெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று அதிரடி குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.

இதுகுறித்து, சென்னையைச்சேர்ந்த மருந்தியல் நிபுணர் சுரேஷ் குமாரிடம் சத்தியம் டிஜிட்டல் குழு கலந்துரையாடிது.

இதனைத்தொடர்ந்து  மத்திய அரசின் மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பின் தென் மண்டல துணை மருந்து கட்டுப்பாட்டாளர் ஸ்ரீனிவாசனை தொடர்புகொண்டு சத்தியம் டிஜிட்டல் குழு கேட்டபோது, அப்படியா? என்று அப்பாவிபோல் கேட்டவர், டெல்லி தலைமை அலுவலகத்திலிருந்து அறிவித்திருப்பார்கள். இதுகுறித்து விசாரித்துவிட்டு கூறுவதாக கூறினார். ஆனால், கடைசிவரை அதுகுறித்து எந்த தகவலையும் அளிக்கவில்லை.  

-ரிதி