ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை…..

60
Advertisement

2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், ஒட்டு மொத்தமாக 46 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியடைந்து, 2வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

3வது இடம் பிடித்த மும்பை அணிக்கு 7 கோடி ரூபாயும், 4வது இடம் பிடித்த லக்னோ அணிக்கு 6.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த Orange Cap வின்னர் சுப்மன் கில் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய Purple Cap வின்னர் முகமது சமி இருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதேபோன்று வளர்ந்து வரும் வீரர், மதிப்பு மிக்க வீரர், போட்டியில் திரும்புமுனை ஏற்படுத்திய வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.