ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் இடையே காரசார வாக்குவாதம்

354
Advertisement

தமிழகத்தில் பரவலாக ஏற்படும் மின்தடை, மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் பட்ஜெட்மீதான விவாதத்தில் மின்வெட்டு பிரச்சனை குறித்து திமுக – அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகம் மின்மிகை மாநிலம் இல்லை என்று தெரிவித்தார்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் சொல்வது போல, அணிலால் ஏற்படுவது மின்தடை என்றும் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் மின்வெட்டு என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.