விஜய் மேல்முறையீடு வழக்கு – பரபரப்பு உத்தரவு

662
Advertisement

வெளிநாட்டு சொகுசுகார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகர் விஜய்க்கு ஒருலட்சம் ரூபாய் அபராதமும், கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை திரும்பப்பெறக்கோரி நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஹேமலதா, துரைசாமி ஆகியோரடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது நுழைவு வரிவிலக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது, நீதிபதி பிறப்பித்த விமர்சனங்களையும் அபராதம் விதித்த உத்தரவையும் திரும்பப்பெறக்கோரி விஜய் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, சொகுசுகார் இறக்குமதி வழக்கில் கட்டப்பட்ட வரி குறித்தும், நுழைவு வரி விலக்கு பற்றியும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இந்த வழக்கை வரும் 26 ஆம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.