கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தான் பிரேமம்.
இந்த படத்தின் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மலையால பிரேமத்தில் சாய் பல்லவி நடித்தார் அந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது,இதனை தொடர்ந்து தெலுங்கு மொழியில் நாகசைதன்ய ஹீரோவாகவும் ,ஸ்ருத்தி ஹாசன் மலர் டீச்சர் ஆகவும் நடித்தார்கள் ,
இந்த தெலுங்கு ரீமேக் வெளியாகி ஹிட் அடித்தது .
இருந்து மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் சரி ஆனா தேர்வு இல்லை என பலரம் ட்ரோல் செய்தனர்.
இருந்தலும் எதையும் கவனிக்காமல் படத்தில் நடித்து முடித்து தன் திறமையால் ரசிகர்களை மேலும் தன பக்கம் சேர்த்தார் ஸ்ருதி.
படம் வெளியாகி சில வருடங்கள் அனா நிலையில் தற்போது தனக்கு வந்த ட்ரோல்கல் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில்,’ப்ரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆனால் நன் முதல் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்,
இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறன்,”என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.