பாதுகாப்பு இல்லாத ஜி பி முத்து T T F வாசனின் அட்டகாசம்

238
Advertisement

இண்டர்நெட்டில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர் ஜி பி முத்து, இதனால் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார், அதுபோலவே நீண்ட பைக் பயணங்கள் மற்றும் சாகசங்களைச் செய்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதன் வழியாகப் பிரபலமானவர் T T F வாசன்.

பைக் சாகசங்களைத் தவிரத் தனது வீடியோவில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியவர்களுக்கு உதவி செய்து இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் வாசன். ஆனால் சமீபத்தில் அதி வேகமாகவும்  மற்றும் சாலை விதிகளை மீறி பைக்கில் பயணம் செய்வதாக வாசன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் யூடியூபர் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய வீடியோ தற்போது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் ஜி பி முத்துவை பைக்கின் பின்னால் அமரவைத்து, 150 கி .மீ வேகத்திற்கு மேல் சென்றுள்ளார், என்னதான்  நகைச்சுவை ரீதியான வீடியோ என்றாலும், ஹெல்மெட்  அணியாமல் ஜி பி முத்து பயணம் செய்ததும் மற்றும் அவரை பீதியில் அழுத்த அடிக்கடி இருக்கைகளை விட்டு வாகனங்களைத் திருப்புவதும் மற்றும் அதிக வேகத்தில் செல்வதும் சரியான செயல் இல்லை.