பவர் ஸ்டார் & வனிதா திடீர் திருமணம்..?

832
Advertisement

நான்காவது திருமணம் செய்துகொண்டாரா வனிதா விஜயகுமார் ?

நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருமணக்கோலத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


அதில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கழுத்தில் மாலையணிந்த நிலையில் வனிதாவுக்கு மாலை அணிவிக்கிறார். இது சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது திருமணமா என்பது குறித்து வனிதா விஜயகுமார் ட்விட்டரில் விளக்கமளிக்கவில்லை.


இதனால் வனிதா உண்மையாகவே பவர்ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்துகொண்டாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில்,வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணம் செய்துகொண்டதாக கருதிய சில ரசிகர்கள், அவர்களுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மூன்றாவது கணவரை விட்டு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.