சமீபத்தில் நித்தியானந்தாவின் கைலாசா சமூக வலைதளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் “பகவான் நித்தியானந்தாவின் நல்லாசியுடன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆதினங்களில் முழுநேரமும் பணி செய்ய வாய்ப்பு” என்கிற அறிவிப்போடு ஒரு தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு, அதில் தொடர்புகொள்ளத் கேட்டுள்ளார்கள்.
அவ்வாறு ஆதினவாசியாக சேர்பவர்களில் சிலரை தான் வசிக்கும் தீவுக்கும் அழைத்து செல்லும் திட்டத்திலும் நித்தியானந்தா இருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இந்தியாவின் பல மாநில காவல்துறையாலும் தேடப்படும் ஒரு நபர் இவ்வளவு பகிரங்கமாக செயல்படுகிறார்…காவல்துறை என்ன செய்கிறது? என்று வேதனைப்படுகிறார்கள் மக்கள்.