உடலின் முக்கிய நோய்களுக்கு மருந்தாகும் 2 கிராம்புகள் 

285
Advertisement

அனைவரின் சமையல் அறையிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய, உணவுப் பொருட்களில் கிராம்பும் ஒன்று. உணவின் சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கிறது.

கிராம்பு மரத்தில் காய்த்த பூ, அதன் தண்டுகள் மற்றும் இலைகள் போன்ற பல்வேறு பாகங்களிலும் மருத்துவ பண்புகள் இருக்கிறது.

எனவே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு கிராம்புகளை நன்றாக மென்று சாப்பிட்டால் பல முக்கிய நோய்களின் அபாயம் குறைகிறது. 

ஒரு சிட்டிகை கிராம்பு பொடியை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, மேலும் இன்சுலின் சுரப்பு முன்னேற்றம் மற்றும் பீட்டா செல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், ஜலதோஷம், மூச்சிகுழாய் ஆழற்சி மற்றும் வைரஸ் தொற்று ஆகிய அனைத்து நோய்களுக்கும் கிராம்பு மருந்தாக அமையும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும், இதன் பண்புகள் இரத்ததில் இருக்கும் நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, எனவே உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, பல் வலி நிவாரணியாகக் கிராம்பு காலங்காலமாக

பயன்படுத்தப்படுகிறது, இது வாய், ஈற்களில் ஏற்படும் அழற்சி, வாய் துர்நாற்றம், குமட்டல் போன்ற பல பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது.

எலும்பு அடர்த்தியைப் பராமரிக்க உதவும் மாங்கனீசு மற்றும் ஃபிளாவனாய்டு போன்ற கூறுகளைக் கிராம்பு கொண்டுள்ளது. இது எலும்பு திசுக்களைச் சரிசெய்ய உதவுகின்றன, இதனால் மூட்டு வலியைக் குறைக்கிறது அல்லது தடுக்கிறது, அதே நேரத்தில் கிராம்பு எண்ணெய் வயதானவர்களில் மூட்டு வலியைக் குறைக்கவும், தசைகளை ஆதரிக்கவும் ஒரு சிறந்த வழியாகும்.

கிராம்பு ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கிறது. காலையில் அவற்றை முதலில் மென்று சாப்பிடுவதால், நாளின் தொடக்கத்தில் செரிமானத்திற்குச் சரியான தொனியை அமைக்கிறது. மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.