இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த பெண் !

481
Advertisement

பெண் ஒருவர் கார்  விபத்தில் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.அதையடுத்து உறவினர்கள் அனைவரும் இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்தில் கூடி உள்ளனர்.

முன்னதாக, 

பெரு நாட்டில் வசித்துவரும் , ரோசா இசபெல் செஸ்பெடெஸ் கல்லாகா (Rosa Isabel Cespedes Callaca)  என்ற பெண் ,கடந்த வரும் சாலைவிபத்து ஒன்றில்  படும்காயாம் அடைந்துள்ளார்.இந்த தகவல் அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பேச்சு மூச்சியின்றி இருந்த  ரோசாவை இறந்து விட்டதாக முடிவு செய்துவிட்டனர் அவரின் குடும்பத்தினர்.அதையடுத்து அவரின்இறுதி சடங்கு நடைபெறும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி , அந்நாளில்  ரோஸாவின் உறவினர்கள் , நண்பர்கள் என அனைவரும் கூடி இருந்தனர்.இறுதி சடங்கு நடைமுறைகள்  தொடங்கியது. ஒருகட்டத்தில்,நடைமுறைகள் முடிந்து விட ரோஸாவின் உடல்  வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டியை அவரின் நண்பர்கள் தூக்கி செல்கின்றனர்.

உறவினர்கள் ஒரே சோகத்தில் சூழ்ந்து நிற்க , ரோஸாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டியை  மெல்ல மெல்ல அடக்கம் செய்யும் இடத்திற்கு எடுத்து செல்கின்றனர்.ஒரு கட்டத்தில் , பெட்டின்  உள்லே  ஏதோ சத்தம் கேட்கிறது.

இதனை கவனிக்கும் நண்பர்கள் தங்கள் தோளில் இருந்து சவப்பெட்டியை கீழே இறக்கு , மேல் மூடியை துறந்து பார்த்துள்ளனர்.ஒரு நிமிடத்தில் அங்கிருந்தவர்கள் இதய துடிப்பு நின்று விடுகிறது.ஆம் , இறந்ததாக நினைத்து , இறுதி சடங்குகள் முடிந்து , குழியில் சவப்பெட்டியை இறக்கும் சில நொடிகளுக்கு முன் , ரோசா இசபெல் கண் விழித்தபடி பார்த்துள்ளார்.ரோசாவை உயிருடன் பார்த்த அவரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து,காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறை , ரோஸாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர்.மேலும் சுகாதாரத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு , ரோசா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.