உலக குடும்ப தினம்

434
Advertisement

மே 15. உலக குடும்ப தினம்.

இந்திய மக்கள் தொகை 136 கோடியே 64 லட்சம்.

இது அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பாக்கிஸ்தான்,
வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்
தொகையைவிட அதிகம்.

உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகித மக்கள் இந்தியாவில்
தான் வாழ்கின்றனர்.

உலக மக்கள் தொகை சுமார் 776 கோடியைத் தாண்டியுள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் 970 கோடியாகவும் இந்த நூற்றாண்டுக்குள்
ஆயிரம் கோடியாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொகை அதிகரிப்புக்கு இந்தியா, நைஜீரியா,
பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா,
இந்தோனேசியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய
ஒன்பது நாடுகளும்தான் காரணம் என்று ஐநா சபை
கூறியுள்ளது.

வருடந்தோறும் சுமார் எட்டு கோடி மக்கள் தொகை
அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில்
சுமார் 143 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.
இது உலக மக்கள் தொகையில் 18 சதவிகிதத்துக்கும்
அதிகமானது.

இந்தியா இன்னும் 7 ஆண்டுகளுக்குள் சீனாவை
முந்திவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 19 கோடிக்கும் அதிகமான மக்கள்
தொகையுடன் முதலிடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது.
விரைவில் 20 கோடியை எட்டிவிடும்.

தமிழகம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன்
ஆறாவது இடத்தில் உள்ளது. இது இந்திய மக்கள் தொகையில்
6 சதவிகிதம் ஆகும்.

கடைசி இடத்தில் லட்சத்தீவுகள் உள்ளன. இங்கு 64
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.

இந்த 130 மக்களும் குடும்பம் குடும்பமாகத்தான் வாழ்ந்து
வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் 25 கோடி
குடும்பங்கள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப அமைப்பு இயல்பானது, சமூகத்தின் அடிப்படையானது.
அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முன்பே
குடும்ப அமைப்பு இருந்து வருவதாக சர்வதேச மனித உரிமை
சாசனம் கூறுகிறது.

அரசைவிட மேலானது குடும்பம். குடும்ப அமைப்பு அழியாமலும்
சிதையாமலும் காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பு.
ஆனால், தமிழகத்தில் குடும்ப அமைப்பு சிதைந்து வருவதாக
ஆய்வொன்று கூறுகிறது.

இந்த விஷயத்தில் இந்தியாவில் தமிழகமே முதலிடத்தில்
உள்ளதாகக் கூறப்படுகிறது- சுமார் 5 சதவிகித அளவுக்கு
குடும்ப அமைப்பு தமிழகத்தில் சிதைந்துள்ளதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் திருமணப் பருவம் அடைந்த 50 கோடிபேர்
திருமண வாழ்வில் நாட்டமில்லாமல் இருப்பதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பே சமூகத்துக்கு அடிப்படை
என்கிறபோது, திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு
நாட்டையே சிதைந்துபோகச் செய்துவிடக் கூடும்.