இருக்கை தரப்படாமல் “கைகுழந்தையுடன் தரையில் அமர்ந்த பெண்ணின் பரிதாப நிலை”

195
Advertisement

டெல்லி மெட்ரோவில் கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்தபடி பெண் ஒருவர் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சர்மா தனது ட்விட்டரில் கடுமையாக விமரிசித்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில், டெல்லி மெட்ரோ ஒன்றில் பெண்கள் வரிசையாக அமர்ந்தபடி பயணம் செய்கின்றனர்.அதேவேளையில், கைக்குழந்தையுடன் பெண் ஒருவரும் அதில் பயணம் செய்கிறார்.

ஆனால் அந்த பெண் தரையில் அமர்ந்துள்ளார்.கைக்குழந்தை வைத்திருந்தும் அங்குள்ள ஒரு பெண் கூட அவருக்கு அமருவதற்க்கு இடம் கொடுக்கவில்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த பெண்ணும், யாராவது இருக்கை தருவார்களா என எதிர்பார்க்காமல் தரையில் அமர்ந்துள்ளார்.இதனை அருகே இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.