ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால்,மனைவி தூக்கிட்டு தற்கொலை

68

சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசெல்வன் – வகிதா ப்ளோரா தம்பதி. ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாடி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும், இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து, வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.