ஆம்புலன்ஸ் எங்கே சார்?  செந்தில் பாலாஜியை காரில் அழைத்து வந்தது ஏன்? உருவாகியுள்ள புதிய சர்ச்சை

216
Advertisement

அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வராமல் காரில் அழைத்து வந்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அதுவும் காரின் பின் இருக்கையில்  படுக்க வைத்து நிலையில், நெஞ்சு வலி வந்தவரை அதுவும் ஒரு அமைச்சரை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தால் வரும் வழியிலேயே அவருக்கு பல்ஸ் பார்த்திருக்கலாம்,  ஈசிஜி பார்த்திருக்கலாம்,  தேவையான முதலுதவி சிகிச்சைகளை வழங்கியிருக்கலாம். அமைச்சர் குடியிருக்கும் பகுதி ஒன்றும் புறநகர் பகுதி கூட இல்லை.

ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.

அப்படியிருக்க அவரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததன் பின்னணி மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவரை காற்றோட்டமாக கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லாமல் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டல் அழைத்து வந்ததன் மர்மமும் புரியவில்லை.

மொத்தத்தில் அமைச்சர் செந்தில்  பாலாஜியின் உடல் நிலை குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.