பெண்களுக்கு மட்டும் அப்டேட் வழங்கும் Whatsapp

226
Advertisement

பெண்களுக்கு மாதம் ஒரு முறை உடல்சோர்வு, வயிற்று வலி மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வகையில் எதிரொலிக்கும் மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொள்வது பெரிய சவாலாக அமையும் நிலையில், எப்போது மாதவிடாய் துவங்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வதே பலருக்கும் தீராத தலைவலியாக உள்ளது.

இது போன்ற நாட்களை கணக்கிட்டு கொள்ள தற்போது பல விதமான appகள் வந்துவிட்டது. எனினும், இனி தனியாக download செய்யும் appஇன் storage பற்றிய கவலை இல்லாமல் whatsappஐ பயன்படுத்தி பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு கொள்ளலாம். 

9718866644 என்ற எண்ணுக்கு hi என மெசேஜ் அனுப்பினால் Whatsappஇல்  சிரோனா (Sirona) என்னும் chatbot activate செய்யப்படும்.

இதில் பயனாளர்கள் அளிக்கும் விவரங்களை வைத்து அடுத்தடுத்த மாதங்களுக்கான மாதவிடாய் நாட்களை, சிரோனா கணக்கிட்டு காட்டும்.

மாதவிடாய் மட்டுமின்றி, கருத்தரிக்க விரும்பும் அல்லது தவிர்க்க நினைக்கும் பெண்களுக்கு தேவையான வழிமுறைகளும் வழங்கப்படுகின்றது.

Whatsappஇல் chatbot ஆக செயல்படும் சிரோனா தனி app ஆகவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.