பெண்ணின் உடம்பில் நடக்கலாம்…… எப்படித் தெரியுமா?

283
Advertisement

தனது திறமையை வெளிப்படுத்துவதற்காக ஒரு பெண் தனது உடம்பில் வரைந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரைச் சேர்ந்த, மேக் அப் கலைஞரான ஓனி மேரி அயோமைட் என்னும் பெண், தனது உடலில் ஓவியங்கள் வரைந்தது அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஐலைனர் போன்ற மேக் அப் பொருட்களைப் பயன்படுத்தி, பிரபலமான நபர்களை இவர் தனது உடம்பில் வரைகிறார்.

நான் ஓவியம் வரையும்போது உடல்வலிக்கத் தொடங்கும். தோள்பட்டை, கழுத்து, இடுப்பு என எல்லாப் பகுதிகளிலும் வலியை உணர்வேன் என்கிறார் அயோமைட்.

Advertisement

ஒரு கலைஞர் சாதிப்பதற்கு எல்லையே இல்லை. பெரும்பாலான கலைப் படைப்புகள் கலைஞனின் ஆளுமையின் தெளிவான பிரதிபலிப்பாகும். ஆனால், இந்தப் பெண் தனது கலைப் படைப்புகளை வேறு லெவலுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.

மேக் அப் பொருட்களைப் பயன்படுத்தித் தனது உடம்பில் பிரபலங்கள் மற்றும் அழகான ஓவியங்களை வரைந்துவரும் ஓனி மேரி உலகளவில் ஒளிரத் தொடங்கியுள்ளார்.