தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திப்பு

256

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளார்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்டும் முயற்சியில், பல்வேறு கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வர உள்ளார். மேற்குவங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மம்தா தமிழகம் வர உள்ளார்.

இந்த பயணத்தின் போது, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இரு முதலமைச்சர்களின் இந்த சந்திப்பு தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, கருதப்படுகிறது.