‘ப்ப்பா…செமயா இருக்கு’ மணப்பெண்ணின் வைரல் வீடியோ

441
Advertisement

அம்மாக்கள் காலத்தில் கல்யாணத்தன்று , குனிந்த தலையோடு, முகத்தில் வெட்கத்தோடும் மணப்பெண் கோலத்தில் பெண்களை அழைத்து வந்து மணமேடையில் அமரவைத்தார்கள்.இன்றோ.. உட்காந்து யோசித்து , விதவிதமான முறைகைளில் மணப்பெண்கள் தங்கள் என்ட்ரியை கொடுத்து வருகிறார்கள்.

மாப்பளையோ… யாரோ ஒருவர் கல்யாணத்திற்கு வந்தது போல உட்காந்து இருக்க , மணப்பெண் பக்கம் அளப்பறையோ மண்டபத்தையே அதிர செய்யும் . இது ஒருபுறம் இருக்க அன்று தான் மணப்பெண்ணிற்கு பிடித்த உணவு பண்டங்கள் பரிமாற வைத்திருப்பார்கள்.

எவன் பாத்தால் எனக்கு என்ன என்பது போன்று , மணப்பெண் அந்த பண்டங்கள் ரசித்து ருசித்து… உண்ணும் பொழுது அதை அவருக்கே தெரியாமல் படம் பிடித்து கொண்டிருக்கும் போது , சட்டெனெ மணப்பெண்ணிற்கு தெரியவர அந்த நொடி அவளின் முகத்தில் வெளிப்படும் வெட்கத்திற்கு ஈடே இல்லை…

இதுபோன்று ரசிக்கும்படியான தருணங்கள் இன்னாட்களில் அதிக அளவில் இணையத்தில் உலா வருகின்றது. தற்போது மற்றொரு வீடியோ ஒன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் , பெண் ஒருவர் மனகோலத்தில் , ஸ்டைலாக உட்காந்து , மோமோசை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பணியில் தோன்றிய தேவதை போல உடை அணிந்துருக்கும் அந்த மணப்பெண் ரசித்து ருசித்து … மோமோசை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார் . அதன் ருசியில் மிதந்த அவர் , சில மூமென்ட்டையும் செய்கிறார் . மணமக்களின் வாழ்வில் முக்கிய தருணமான மண நாளில் , மணப்பெண்ணின் இந்த செயல் ரசிக்கும்படியாக உள்ளது.

https://www.instagram.com/reel/CaT_5zegCVS/?utm_source=ig_embed&ig_rid=05b7dee5-e15b-4996-a85f-b6f56de0bf25

நெட்டிசன்களை… ” நம்முள் ஒருவராக ” உணரச்செய்த இந்த மணப்பெண்ணிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.