தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டிபற்றி விராட் கோலி பெருமிதம்

159
Advertisement

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த நிலையில் வீடியோ ஒன்றில் விராட் கோலி சொல்லியுள்ளதாவது

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனது நீண்ட பயணனத்தில் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் .

Advertisement

நான் தனிப்பட்ட முறையில் குறைந்த ரன்களை இலக்காக கொண்டு ஒருபோதும் விளையாடியதில்லை. நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் இரட்டை சதங்களை அடித்திருக்கிறேன் .
என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்று கூறியுள்ளார் .