மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!

279
Advertisement

அதிகாலை குளிரில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் முந்திரி விற்ற கல்லூரி மாணவியின் சிரிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலையில் படிப்பு, இரவில் வேலை, அதன் நடுவிலும் இனிமையான புன்முறுவல் என வாழ்க்கையின் சவால்களை நேர்மறையான அணுகுமுறையுடன் ஒரு கை பார்க்கும் இந்த சிங்கபெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வசந்தி என்ற இந்த பெண்ணின் கல்விக் கனவுக்கு உதவும் வகையில் செஞ்சி பேரூராட்சி தலைவர் KMS மொக்தியார் அலி மஸ்தான் அவர்கள் 22,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://www.instagram.com/p/ClRLmogB5NF/?utm_source=ig_web_copy_link