யானைக் குட்டிகள்; முத்தமிட்டு கொஞ்சும் காட்சி

136
elephant
Advertisement

விலங்குகளின் வித்தியாசமான செயல்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை பார்ப்பதென்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகள் மட்டுமின்றி வனவிலங்குகளின் வித்தியாசமான செய்கைகளும் நம் மனங்களை மிக எளிதாக கவர்ந்து விடுகின்றன. யானைகள் குளிப்பதையும் உணவு உண்பதையும் சேட்டை செய்வதையும் இணையத்தில் பார்த்திருப்போம்.

ஆனால் ஒரு யானை மற்றொரு யானை மீது அன்பு காட்டுவதை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில் இரண்டு யானைக் குட்டிகள் முத்தமிட்டு கொஞ்சி மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கென்யாவில் செயல்பட்டு வரும் யானைகள் மீட்பு அறக்கட்டளை இந்த காட்சியை தன்னுடைய ட்விட்டர பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இரண்டு குழந்தைகள் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு விளையாடுவதை போல அமைந்திருக்கும் இந்த காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.