பிக் பாஸ் போட்டியாளருக்காக பிரச்சாரம் செய்யும் திருமா!

144
Advertisement

பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் முடிவுக் கட்டத்தை நோக்கி விரைந்து வருகிறது.

கடைசி eviction ஆக ADK வெளியேற ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவாணன் மற்றும் விக்ரமன் இறுதிப்போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.

நிகழ்ச்சியின் Finals ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்க, மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன், தம்பி விக்ரமன் அவர்களை வெற்றி பெறச்செய்வோம் எனவும், பிக் பாஸ் தேர்வுக்கான போட்டியில் disney plus appஇல் விக்ரமனுக்கு வாக்களிப்போம் என அறம் வெல்லும் என்ற hashtag உடன் ட்வீட் செய்துள்ளார்.

அரசியல்வாதி ஒருவர் பிக் பாஸ் போட்டியாளருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பகிர்ந்துள்ள இந்த ட்வீட் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.