ஜி20 நாடுகளின் 2வது சுகாதார பணிக்குழு கூட்டம் கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தொற்று குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார். அதேசமயம் கொரோனா தொற்றுக்கு எதிரான தயார் நிலைகளை மேற்கொள்வதில், தொய்வு இருக்கக்கூடாது என்றார். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
எனவே, டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றை இந்தியா ஊக்குவித்து வருவதாக கூறினார். உலக சுகாதாரத்தில் நம்பிக்கை அளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஜி20 சுகாதார பணிக் குழு முன்னிலை வகிக்கிறது என்றும், மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.