Twitterல ஒரு சூப்பர் அப்டேட்

253
Advertisement

சுருக்கமான பதிவுகளுக்கு பெயர் போன சமூகவலைத்தளமான டிவிட்டரை சாமானியர்கள் முதல் திரை, அரசியல் பிரபலங்கள் மற்றும் உலகத்தலைவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பயனாளர்கள் அதிக வார்த்தைகளுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வசதியாக, டிவிட்டர் நோட்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது டிவிட்டர் நிறுவனம்.

நோட்ஸில் 2500 வார்த்தைகள் வரை எழுதுவதோடு, இமேஜ் அல்லது GIF சேர்த்து போஸ்ட் செய்யும் optionஉம் உள்ளது.

WordPress, Medium போன்ற மற்ற blogging sites போலவே, டிவிட்டர் நோட்ஸின் பதிவுகளுக்கு கிடைக்கும் URL லிங்கை பிற தளங்களில் சுலபமாக share செய்ய முடியும்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா பயனாளர்களுக்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ள இந்த அப்டேட் விரைவில் பரவலான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.