மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலருக்கும்
மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
உடற்பயிற்சிக்காகப் சிலர் ட்ரெட்மில்லை
வீட்டில் வாங்கிவைத்துள்ளனர். விலை அதிகம்,
மின்சாரத் தேவை போன்றவற்றின் காரணமாகப்
பலர் ட்ரெட்மில்லை வாங்கத் தயங்கிவருகின்றனர்.
அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்விதமாக
மரத்தால் ஆன ட்ரெட்மில்லை உருவாக்கி சாதனை
படைத்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள
அந்த ட்ரெட்மில் அநேகம் பேரின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கிய அந்த சாதனை
மனிதருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இனி, எல்லாரும் ஈஸியா நடக்கலாம்….